jaffna hindu college anthem
5/22/2025Aria v1
வாழிய யாழ்நகர் இந்துக்கல் லூரி
வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்
இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே
இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்
கலைபயில் கழகமும் இதுவே -பல
கலைமலி கழகமும் இதுவே- தமிழர்
தலைநிமிர் கழகமும் இதுவே !
எவ்விட மேகினும் எத்துயர் நேரினும்
எம்மன்னை நின்னலம் மறவேம்
என்றுமே என்றுமே என்றும்
இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்றே!
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்
அவைபயில் கழகமும் இதுவே!
ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்
ஒருபெருங் கழகமும் இதுவே !
ஒளிர்மிகு கழகமும் இதுவே!
உயர்வுறு கழகமும் இதுவே!
உயிரன கழகமும் இதுவே !
தமிழரெம் வாழ்வினில் தாயென மிளிரும்
தனிப் பெருங் கலையகம் வாழ்க !
வாழ்க! வாழ்க! வாழ்க
தன்னிகர் இன்றியே நீடு
தரணியில் வாழிய நீடு.